எனது அணுகல் குறியீடு வேலை செய்யவில்லை என்றால் என்னவாகும்?
“உங்கள் அணுகல் குறியீடு தவறானது போல் தெரிகிறது. இது மீண்டும் நடந்தால், உங்கள் சேவை நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும்.” என்ற பிழைச் செய்தியைப் பெற்றால், சிக்கலைப் பிழையறிந்து திருத்த கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்:
- “ss://” என்ற முதல் ஐந்து எழுத்துகள் உட்பட முழு அணுகல் குறியீட்டையும் டைப் செய்வதை உறுதிசெய்துகொள்ளவும். இவை தானாகக் கிளிப்போர்டுக்கு நகலெடுக்கப்படாமல் போகலாம். முழு அணுகல் குறியீட்டிற்கான எடுத்துக்காட்டு (இது மாதிரி மட்டுமே, செயல்படாது):
ss://[email protected]:39485/?outline=1
- அணுகல் குறியீட்டைக் கிளிப்போர்டுக்கு நகலெடுக்கவே முடியவில்லை என்றால் அதற்கு உங்கள் மெசேஜிங் ஆப்ஸோ பிளாட்ஃபார்மோ காரணமாக இருக்கலாம். பெரும்பாலும் உங்கள் தொடர்புப் பட்டியலில் இல்லாத ஒருவரிடம் இருந்து மெசேஜைப் பெறும்போது இப்படி நடக்க வாய்ப்புள்ளது. மெசேஜில் இருந்து குறியீட்டை நகலெடுக்கிறீர்கள் என்றால் உங்கள் தொடர்புகளில் அனுப்புநர் சேர்க்கப்பட்டுள்ளதை முதலில் உறுதிசெய்துகொள்ளவும். அதன் பிறகு இணைப்பை மீண்டும் அணுக முயலவும்.
- முதல் இரண்டு வழிமுறைகளைப் பின்பற்றிய பிறகும் பிழைச் செய்தியைப் பெறுகிறீர்கள் என்றால், சேவையகம் தடுக்கப்பட்டிருக்கலாம் அல்லது அணுகல் குறியீடு தவறாக இருக்கலாம். நீங்கள்தான் சேவை நிர்வாகி என்றால் உங்களுக்காகப் புதிய குறியீட்டை உருவாக்க முயலவும். இல்லையென்றால், புதிய குறியீட்டைப் பெற உங்கள் சேவை நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும்.