Outline சேவையகத்துடன் இணைத்தபிறகும் ஏன் என்னால் இணையத்தை அணுக முடியவில்லை?
நீங்கள் மொபைல் ஃபோனைப் பயன்படுத்தினால் மொபைல் டேட்டா, வைஃபை ஆகிய இணைப்புகளுக்கிடையே மாற்றிப் பார்க்கவும். சில நேரங்களில் ஓர் இணைப்பு வேலை செய்யாதபோது மற்றொன்று வேலை செய்யலாம். கம்ப்யூட்டரைப் பயன்படுத்தினால் பிராட்பேண்டு இணைப்பைத் துண்டித்துவிட்டு மீண்டும் இணைத்துப் பார்க்கவும்.
இதன் பிறகும் தொடர்ந்து சிக்கல்களை எதிர்கொண்டால் உங்கள் Outline சேவையகத்தில் பிரச்சனை ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. வேறொரு சேவையகத்திற்கான புதிய அணுகல் குறியீட்டைப் பெற உங்கள்சேவை நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும். உங்கள் அணுகல் குறியீட்டுக்கு ஒதுக்கப்பட்ட டேட்டா வரம்பைக் கடந்து விட்டீர்கள் என்றால்,https://google-jigsaw--jigsawuat.sandbox.my.site.com/outline/s/article/Terminology[அணுகல் குறியீட்டின்](/about/terminology) டேட்டா வரம்பை நிர்வாகி அதிகரிக்கவும் முடியலாம்.