Outline சேவையுடன் என்னால் ஏன் இணைக்க முடியவில்லை?
Outline சேவையுடன் இணைக்க முடியாததற்கான சில காரணங்கள்:
- உங்கள் சாதனம்/client/troubleshooting/connection-issues#Oneஇணையத்தில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது#Internetissues**.**சில நேரங்களில் உங்கள் சாதனத்தின் நெட்வொர்க் இணைப்பில் இடையூறு ஏற்படுவதால் நெட்வொர்க் ஐகான்கள் புதுப்பிக்கப்பட சிறிது நேரம் ஆகலாம். உங்கள் சாதனம் லோக்கல் நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டிருந்து, இணைய இணைப்பு இல்லாமல் இருக்கலாம்.
- உங்கள் Outline சேவையகத்திற்கான/client/troubleshooting/connection-issues#Twoஅணுகலை நெட்வொர்க் ஃபயர்வால் தடுக்கிறது#FirewallIssues**#FirewallIssues.**பள்ளி, பணியிடம், இலவச வயர்லெஸ் நெட்வொர்க் போன்ற பொது நெட்வொர்க்குகளைப் பயன்படுத்தினால் இப்படி நடப்பது இயல்பு.
- உங்கள் சாதனத்தில்/client/troubleshooting/connection-issues#Threeஇருக்கும் ஃபயர்வால் அல்லது ஆன்ட்டி வைரஸ் மென்பொருள்#SoftwareIssuesஉங்கள் Outline சேவையகத்திற்கான அணுகலைத் தடுக்கிறது.
- உங்கள்மொபைல் அமைப்புகளைமாற்ற வேண்டியிருக்கலாம்.
- உங்கள் சேவை நிர்வாகிசேவையகத்தை அழித்திருக்கலாம் அல்லது ISP உங்கள் கோரிக்கையைத் தடுத்துக்கொண்டிருக்கலாம்.
இணைய இணைப்புச் சிக்கல்கள்:
எப்படிச் சோதனை செய்வது?
Outline சேவையகத்தை முடக்கி, இணைய இணைப்பு வந்துவிட்டதா என்று பார்க்கவும்.
- ஆம் எனில், பிழையறிந்து திருத்தும் மேலும் சில வழிகளை கீழே பாருங்கள்.
- இல்லையென்றால், சில நிமிடங்கள் காத்திருந்து உங்கள் இணைப்பு அமைப்புகள் தானாகவே புதுப்பிக்கப்படுகின்றனவா என்று பார்க்கவும்.
சரிசெய்ய வேண்டியவை:
உங்கள் சாதனத்தை மீண்டும் இணையத்தில் இணைக்க:
- மற்றொரு சாதனத்தால் அதே நெட்வொர்க்குடன் இணைக்க முடிகிறதா எனப் பார்க்கவும். பிற சாதனங்களையும் இணையத்தில் இணைக்க முடியவில்லை என்றால் நெட்வொர்க் செயலிழந்து இருக்கலாம். அது மீண்டும் வரும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும் அல்லது பிழையறிந்து திருத்த வேண்டும்.
- பிற சாதனங்களை அதே நெட்வொர்க்கில் இணைக்க முடிந்தால் மீண்டும் இணையத்தில் இணைக்க, பின்வரும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வழிமுறைகளை முயலலாம்:
- சாதனத்தை விமானப் பயன்முறைக்கு (மொபைல்) மாற்றவும்
- சாதனத்தை மீண்டும் தொடங்கவும்
- சாதனத்தை ஷட் டவுன் செய்துவிட்டு 2 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கவும்
நெட்வொர்க் ஃபயர்வால் சிக்கல்கள்:
எப்படிச் சோதனை செய்வது?
- தற்போதைய வைஃபை அல்லது வயரால் இணைக்கப்பட்டுள்ள நெட்வொர்க்கில் இருந்து துண்டிக்கவும்.
- செல்லுலார் நெட்வொர்க் போன்ற வேறு நெட்வொர்க்கில் இணைக்கவும்.
- Outline சேவையகத்துடன் மீண்டும் இணைக்க முயலவும்.
மற்ற நெட்வொர்க்கில் இருக்கும்போது உங்களால் இணைக்க முடிந்தால் இதுதான் சிக்கலாக இருக்கும்.
சரிசெய்ய வேண்டியவை:
சேவை நிர்வாகியைத் தொடர்புகொண்டு உங்கள் Outline சேவையகத்திற்கான அணுகலை வழங்கும்படி கேட்கவும் அல்லது இதற்குப் பதிலாக வேறு நெட்வொர்க்கைத் தொடர்ந்து பயன்படுத்தவும்.
ஃபயர்வால் அல்லது ஆன்ட்டி வைரஸ் மென்பொருள் சிக்கல்கள்:
எப்படிச் சோதனை செய்வது?
வேறொரு சாதனத்தில் இருந்து Outline சேவையகத்துடன் இணைத்துப் பார்க்கவும்.
கவனத்திற்கு: வேறொரு சாதனத்தில் Outline பயன்படுத்த அணுகல் குறியீடும் Outline ஆப்ஸும் தேவை.
சரிசெய்ய வேண்டியவை:
VPN, Outline டிராஃபிக் ஆகியவற்றை அனுமதிக்கும் வகையில் உங்கள் ஃபயர்வால் அல்லது ஆன்ட்டி வைரஸ் மென்பொருள் அமைப்புகள் உள்ளனவா என்பதைப் பார்க்கவும்.
சாதன அமைப்புகள்:
சரிபார்க்க வேண்டியவை:
Android சாதனங்களுக்கு:
- அமைப்புகள் ஆப்ஸைத் திறக்கவும்.
- உங்கள் சாதனத்தில் VPN அமைப்புகளைக் கண்டறியவும். (உங்கள் மொபைலில் தற்போது அணுகல் உள்ள எல்லா VPN ஆப்ஸையும் VPN அமைப்புகள் காட்டும்.)
- VPN அமைப்புகளில் Outline இல்லை என்றால் Outlineனை நிறுவல் நீக்கிவிட்டு மீண்டும் நிறுவவும். நிறுவப்பட்டதும் சாதனம் தானாகவே Outlineனுக்கு அணுகல் வழங்கும்.
உங்கள் Android சாதனத்தில் திரை மேலடுக்கு ஆப்ஸ் எதுவும் நிறுவப்படவில்லை என்பதை உறுதிசெய்துகொள்ளவும். நிறுவப்பட்டிருந்தால் Outline அனுமதிகளுக்கான சாளரம் முன்புலத்தில் காட்டப்படுவதற்குப் பதிலாகப் பின்புலத்தில் இருக்கலாம்.
Android சாதனத்தில் அமைப்புகள் > ஆப்ஸ் > ஆப்ஸிற்கான சிறப்பு அணுகல் என்பதற்குச் செல்லவும். அதன்பிறகு ‘பிற ஆப்ஸின் மேலே காட்டு’ என்பதைத் தட்டவும். வேறு ஏதேனும் ஆப்ஸிற்கு இது அனுமதிக்கப்பட்டிருந்தால் அந்த ஆப்ஸிற்கான அணுகலை நீங்கள் அகற்றலாம்.
iOS சாதனங்களுக்கு: இந்த உதவிக் கட்டுரையைப் படிக்கவும்.
சேவையகச் சிக்கல்கள்:
எப்படிச் சோதனை செய்வது?
ஒன்றுக்கு மேற்பட்ட சேவையகங்களுக்கான அணுகல் உங்களிடம் இருந்தால் வேறொரு சேவையகத்துடன் இணைத்துப் பார்க்கவும்.
சரிசெய்ய வேண்டியவை:
உங்கள் சேவை நிர்வாகியைத் தொடர்பு கொண்டு சேவையகம் அழிக்கப்பட்டுள்ளதா என்று தெரிந்துகொள்ளவும். அழிக்கப்பட்டிருந்தால் வேறொரு சேவையகத்திற்கானஅணுகல் குறியீட்டை வழங்கும்படி கேட்கவும்.
சேவையகத்தை நீங்கள் அமைத்தால், Outline Manager அல்லது SSH போன்ற வேறொரு முறையின் மூலம் இணைக்க முயலவும். இணைக்க முடியவில்லை என்றால், சேவையகம் இன்னும் ஆன்லைனில் இருக்கிறதா என்று கிளவுடு வழங்குநர் கன்சோலுக்கு (இருந்தால்) சென்று தெரிந்துகொள்ளலாம்.