Skip to main content

ஃபயர்வால் பிழைகள்

மூன்று வகையான ஃபயர்வால் சிக்கல்களை நீங்கள் எதிர்கொள்ளலாம்:

நெட்வொர்க் ஃபயர்வால் மூலம் நீங்கள் தடுக்கப்படலாம்.

பள்ளி அல்லது பணியிடத்தில், ஃபயர்வால் செய்யப்பட்ட நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டிருக்கும்போது Outline சேவையகத்தை நிறுவ முயல்கிறீர்கள் என்றால், வேறு நெட்வொர்க்கில் இருக்கும்போது நிறுவ முயலவும்.

இது வேலை செய்யவில்லை என்றால், உங்கள் நெட்வொர்க் நிர்வாகியைத் தொடர்புகொண்டு ஃபயர்வால் செய்யப்பட்ட நெட்வொர்க்கிற்கும் உங்கள் Outline சேவையகத்துக்கும் இடையே இணைப்புகளை அனுமதிக்கும்படி கேட்கவும். உங்கள் Outline சேவையகத்தின் IP முகவரியும் Outline இயங்கும் போர்ட்டுகளும் (நிறுவல் ஸ்கிரிப்ட்டின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ளன) உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

சாதனத்தின் ஃபயர்வால் மூலம் நீங்கள் தடுக்கப்படலாம்.

தரமற்ற போர்ட்டுகளில் அவுட்கோயிங் இணைப்புகளைத் தடுக்கும் மென்பொருளோ அங்கீகரிக்கப்படாத மென்பொருளோ உங்கள் சாதனத்தில் இருந்தால் (எ.கா. CheckPointடின் ZoneAlarm), Outline சேவையகத்திற்கு விதிவிலக்கை உருவாக்குவது குறித்துத் தெரிந்துகொள்ள உங்கள் சாதனம் அல்லது மென்பொருளுக்கான ஆவணங்களைப் பார்க்கவும்.

சேவையகத்தின் ஃபயர்வால் மூலம் நீங்கள் தடுக்கப்படலாம்.

Outline சேவையகம் இயங்கிக் கொண்டிருக்கும் போர்ட்டுகளைத் திறக்க, உங்கள் சேவையக ஃபயர்வாலுக்கான விதிவிலக்குகளை நீங்களே உருவாக்க வேண்டுமென்று உங்கள் கிளவுடு வழங்குநர் கேட்கலாம். நீங்கள் நிறுவல் ஸ்கிரிப்டை இயக்கியபிறகு, உங்கள் சேவையகத்தில் Outline இயங்குமிடத்தில் ரேண்டம் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு போர்ட்டுகள் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். இந்த இரண்டு போர்ட்டுகளையும் திறந்தால் போதுமானது.

உங்கள் சேவையக ஃபயர்வாலுக்கு விதிவிலக்குகளை உருவாக்க 'ufw', 'iptables' ஆகியவற்றுக்கான ஆவணங்களைப் பார்க்கும்படி பரிந்துரைக்கிறோம்: