Skip to main content

தரவு மற்றும் தகவல்களைச் சேகரித்தல்

தனிப்பட்ட தகவல்களை வழங்குவதற்கு நீங்கள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே Outline அவற்றைச் சேகரிக்கும். நீங்கள் பார்க்கும் இணையதளங்கள், யாருடன் என்ன தகவல் பரிமாறிக்கொள்கிறீர்கள் என்பது போன்ற தகவல்களையும் Outline சேகரிக்காது.

Outline Manager மூலம் நீங்கள் கிளவுடு வழங்குநருடன் கணக்கை உருவாக்கினாலோ உள்நுழைந்தாலோ, உங்கள் கிளவுடு வழங்குநருக்கு நீங்கள் வழங்கும் எந்தத் தகவலையும் (உங்கள் மின்னஞ்சல் முகவரி, பெயர், பில்லிங் தகவல், பேமெண்ட் விவரங்கள் போன்றவை) நாங்கள் சேகரிக்க மாட்டோம்.

நாங்கள் தானாகவே சேகரிக்கும் தகவல்கள்

இரண்டு வகையான தகவல்களைத் தானாகவே சேகரிக்கிறோம்.

  1. சேவையக IP

Outline சேவையக IPயை Quay.io சேகரிக்கிறது. சமீபத்திய பாதுகாப்பு மற்றும் அம்ச மேம்படுத்தல்களுடன் சேவையகம் தானாகவே புதுப்பிக்கப்படும்போது எங்களால் அதை அணுக முடியும். கிளவுடு சேவையக வழங்குநரையும், Outline சேவையகம் அமைக்கப்பட்டுள்ள நகரத்தையும் சேவையக IP அடையாளம் காணக்கூடும். ஆனால், சேவையகத்தை யார் இயக்குகிறார்கள் அல்லது யார் அணுகுகிறார்கள் என்பது பற்றிய தகவலை இது வழங்காது.

  1. தனிப்பட்ட முறையில் அடையாளம் காண முடியாத தொழில்நுட்பத் தகவல்

Outline சிதைவு ஏற்பட்டாலோ, தீவிரமான பிழை ஏற்பட்டாலோ, Outline ஆப்ஸ் மூலம் நேரடியாகக் கருத்துகளை நீங்கள் அனுப்பினாலோ கீழே பட்டியலிடப்பட்டுள்ள தகவல்கள் சேகரிக்கப்படும். நிலைத்தன்மை அல்லது செயல்திறன் சிக்கல்களைக் கண்டறிந்து சரிசெய்ய மட்டுமே இந்தத் தகவல்கள் பயன்படுத்தப்படும்.

  • நாடு
  • மொழி
  • சிதைவு/பிழை ஏற்பட்ட தேதி மற்றும் அதற்கு முந்தைய 100 வரையிலான நிகழ்வுகள். உதாரணமாக 'அறிமுகம்' பகுதியை பயனர் திறப்பது.
  • நிலையான முறையில் தொகுக்கப்பட்ட பிழைச் செய்திகள்
  • OS பெயர் மற்றும் பதிப்பு
  • மொபைல் மாடல் (பொருந்தினால்)
  • ஆப்ஸ் தொடக்க நேரம்
  • உலாவி
  • ஆர்க்கிடெக்ச்சர்
  • Outline பதிப்பு மற்றும் பதிப்பு எண்

இந்தத் தகவல் HTTPS மூலம் Sentry (sentry.io) எனப்படும் மூன்றாம் தரப்பு ஓப்பன் சோர்ஸ் பிழைக் கண்காணிப்பு வழங்குநருக்கு அனுப்பப்படும். அங்கீகரிக்கப்படாத அணுகல், தகவல் வெளியீடு, உபயோகம், இழப்பு ஆகியவற்றிலிருந்து உங்கள் தரவைப் பாதுகாக்க, தொழிற்துறைத் தரத்தில் பல்வேறு தொழில்நுட்பங்களையும் சேவைகளையும் Sentry பயன்படுத்துகிறது. Sentryயின் கொள்கைள் பற்றி ஏதேனும் கேள்விகள் இருந்தால் https://sentry.io/security/, https://sentry.io/privacy/ ஆகிய தளங்களுக்குச் செல்லவும் அல்லது [email protected] என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும். Sentry சேமிக்கும் எல்லா Outline தரவையும் Outline குழு உறுப்பினர்கள் மட்டுமே அணுகக்கூடிய வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

நீங்கள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே நாங்கள் பெறும் தகவல்கள்

நீங்கள் ஒப்புதல் அளித்ததும் பின்வரும் தகவல்களை Outline குழுவிற்கு Outline அனுப்பும்.

  1. பயன்பாட்டு அளவீடுகள்

கடைசி ஒரு மணிநேரம் மற்றும் ஒவ்வொரு அணுகல் குறியீட்டுக்கும் என்ற அடிப்படையில், பரிமாற்றப்பட்ட பைட்டுகளின் எண்ணிக்கை, சேவையகத்தில் பயனர் இணைந்திருந்த கால அளவு, பயன்படுத்தப்பட்ட அனுமதிச் சான்றுகள் உருவான நாடுகள் மற்றும் தானியங்கு சிஸ்டங்கள், ஏதேனும் அம்சம் இயக்கப்பட்டதா அல்லது முடக்கப்பட்டதா என்பது போன்ற தகவல்களை ஒவ்வொரு Outline சேவையகமும் தானாகவே சேகரிக்கிறது. தகவல்தொடர்பு உள்ளடக்கங்கள் அல்லது உள்நுழைவு விவரங்கள், மின்னஞ்சல் முகவரிகள், சாதன ஐடிகள் போன்ற தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தரவுத்தகவல்கள் பதிவு செய்யப்படுவதில்லை. எல்லா அளவீடுகளும் சேவையக ஐடியுடன் இணைக்கப்பட்டுள்ளன. சேவையக ஐடியை மாற்றுவதற்கான வழிமுறைகளை இங்கே பார்க்கலாம்.

இயல்பாக, Outline சேவையகங்கள் இந்த அளவீடுகளை Outline குழுவுடன் பகிராது. சேவையக நிர்வாகி பயன்பாட்டு அளவீடுகளைப் பகிர்வதற்கான ஒப்புதலை வெளிப்படையாக அளித்தால், இந்தத் தகவல் ஒவ்வொரு மணிநேரமும் Outline குழுவிற்குப் பாதுகாப்பாக அனுப்பப்படும். 60 நாட்களுக்குப் பிறகு, பயன்பாட்டு அளவீடுகள் நாடு அளவில் ஒருங்கிணைக்கப்படும். Outline Managerரில் உள்ள 'அமைப்புகள்' மெனுவிற்குச் சென்று பயன்பாட்டு அளவீடுகளைப் பகிர்வதற்கான விருப்பத்தேர்வை எப்போது வேண்டுமானாலும் சேவையக நிர்வாகிகள் மாற்றலாம்.

உங்கள் சேவையக உபயோகம் பற்றிய அடையாளம் நீக்கப்பட்ட அளவீடுகளை எங்களுடன் பகிர்வதற்கு நன்றி. உபயோகம் தொடர்பான போக்குகளை அளவிடுவதற்கும் தயாரிப்பை மேம்படுத்துவதற்கும் அவற்றை நாங்கள் பயன்படுத்துகிறோம்.

உதாரணமாக, ஒரு சேவையக நிர்வாகி எங்களுடன் அவரது பயன்பாட்டு அளவீடுகளைப் பகிர்வதற்கு ஒப்புதல் அளித்தால், அமெரிக்கா மற்றும் கனடாவில் பயன்படுத்தப்பட்ட மூன்று குறியீடுகளில் இருந்து தரவு வரம்புகள் அம்சம் இயக்கப்பட்டு, ID 12345 என்ற சேவையகம் நேற்று 3 மணிநேரம் பயன்படுத்தப்பட்டது, மொத்தம் 500 மெகாபைட்டுகள் தரவு பரிமாற்றப்பட்டது என்பதைத் தெரிவிக்கும் தகவல்களை நாங்கள் பெறக்கூடும்.

  1. நீங்கள் கருத்தைச் சமர்ப்பித்தால் உங்கள் கருத்துகள் மற்றும் மின்னஞ்சல்

Outline Manager மற்றும் Outline ஆப்ஸில் குழுவிற்குக் கருத்துகளைச் சமர்ப்பிக்கலாம். தனிப்பட்ட ஒருவரை அடையாளம் காணக்கூடியத் தகவலைச் சேர்க்க வேண்டாம் என்று பரிந்துரைக்கிறோம். இருப்பினும், குழுவிடம் இருந்து நீங்கள் பதிலை எதிர்பார்த்தால் மின்னஞ்சல் முகவரியைச் சேர்ப்பதற்கான புலத்தில் முகவரியை வழங்கலாம். சில அடிப்படைத் தகவல்களையும் நாங்கள் தானாகவே சேகரிக்கிறோம், இதன்மூலம் உங்கள் கருத்தைப் புரிந்துகொள்ள முடியும். எந்தத் தரவைச் சேகரிக்கிறோம் என்பதைப் பார்க்க "நாங்கள் தானாகவே சேகரிக்கும் தகவல்கள்" என்பதற்கு மேலே உள்ள 2வது தகவலைப் பார்க்கவும்.Outline சேவையகத்தின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை நடைமுறைகள் குறித்து இங்கே மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் Androidல் Outline ஆப்ஸின் பீட்டா பதிப்பைப் பயன்படுத்தினால், Googleளின் Firebase சேவையைப் பயன்படுத்தி நாங்கள் பிழைதிருத்த விவரங்களைச் சேகரிக்கக்கூடும். இது சிக்கல்களைக் கண்டறிந்து Outline சேவையகத்தை மேம்படுத்த எங்களுக்கு உதவும். Firebaseஸின் தனியுரிமை மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள firebase.google.com/support/privacy என்ற தளத்திற்குச் செல்லவும். Firebase மூலம் இந்தத் தகவல்களை Outline அனுப்புவதற்கு நீங்கள் விரும்பவில்லை என்றால் ஆப்ஸின் தயாரிப்புப் பதிப்பைப் பயன்படுத்துங்கள்.