Outline பயன்படுத்தும்போதான பாதுகாப்பு மற்றும் தனியுரிமை
Outline பயன்படுத்தும்போதான பாதுகாப்பு மற்றும் தனியுரிமை
உங்கள் ஆன்லைன் தகவல்தொடர்புகளை Outline பாதுகாக்கும் விதம்
நீங்கள் உள்ளூர் அல்லது தேசிய அளவிலான நெட்வொர்க் மூலம் இணையத்தைப் பயன்படுத்தும்போது, இன்டர்நெட் டிராஃபிக் கண்காணிக்கப்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
Outline உங்கள் தேசிய அளவிலான நெட்வொர்க்கிற்குள் பயன்படுத்தப்படும்போது உங்கள் இன்டர்நெட் டிராஃபிக்கை என்க்ரிப்ட் செய்வதன் மூலம் உங்கள் தகவல்தொடர்புகளை தனிப்பட்டதாக வைத்திருக்க உதவுகிறது, அது Outline சேவையகத்தை அடையும் வரை அதை என்க்ரிப்ட் செய்கிறது. Outline மூலம் டிராஃபிக் என்க்ரிப்ட் செய்யப்பட்டால், நெட்வொர்க்கைக் கண்காணிப்பவர்கள் நீங்கள் பார்வையிடும் இணையதளங்களையோ பரிமாறும் தகவலையோ ஆய்வு செய்ய முடியாது.
உங்கள் நாட்டில் அணுக முடியாத, முழுமையான பாதுகாப்பை வழங்கும் தகவல்தொடர்புக் கருவிகளுக்கான அணுகலை மீட்டெடுக்கவும் Outline உங்களுக்கு உதவக்கூடும்.
என்க்ரிப்ஷன் தரநிலைகள்
AEAD 256-bit Chacha2020 IETF Poly 1305 மறைகுறியீட்டைப் பயன்படுத்தி உங்கள் சாதனத்திற்கும் Outline சேவையகத்திற்கும் இடையிலான தகவல்தொடர்புகளை Outline என்க்ரிப்ட் செய்கிறது. ரகசியத்தன்மை, முழுமைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை AEAD மறைகுறியீடுகள் வழங்குகின்றன. மேலும், நவீன வன்பொருளில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்துகின்றன.
பாதுகாப்புத் தணிக்கைகள்
2018ல், சமீபத்திய பாதுகாப்புத் தரநிலைகளுக்கு ஏற்ப மென்பொருளை மதிப்பாய்வு செய்யும் இரண்டு சுயாதீன டிஜிட்டல் பாதுகாப்பு நிறுவனங்களான Radically Open Security, Cure53 ஆகியவற்றால் Outline தணிக்கை செய்யப்பட்டது. 2022ல் Radically Open Security கூடுதல் தணிக்கையை நடத்தியது, மேலும் 2024ல் Cure53, Outline SDKவைத் தணிக்கை செய்தது. அவற்றின் அறிக்கைகளை இங்கே படிக்கலாம்:
- Radically Open Security பெனட்ரேட்டிங் டெஸ்ட் அறிக்கை (மார்ச் 2018)
- Cure53 பெனட்ரேட்டிங் டெஸ்ட் மற்றும் தணிக்கை அறிக்கை Jigsaw Outline (டிசம்பர் 2018)
- Radically Open Security பெனட்ரேட்டிங் டெஸ்ட் அறிக்கை (டிசம்பர் 2022)
- Cure53 பெனட்ரேட்டிங் டெஸ்ட் அறிக்கை Jigsaw Outline VPN SDK (ஜனவரி 2024)
அடையாளம் நீக்கப்பட்ட அளவீடுகளும் பதிவுகளும்
பயன்படுத்தப்படும் இணைய வேகத்தை ஒவ்வொரு அணுகல் விசைக்கும் 'பரிமாற்றப்பட்ட பைட்டுகளாக' Outline டிராக் செய்யும். சேவையக நிர்வாகிகள் தங்கள் கிளவுட் சேவையக வழங்குநர்களிடம் பெற்றுள்ள இணைய வேகச் சந்தாக்களைத் தேவைக்கேற்ப சரிசெய்ய இந்தத் தகவல் அனுமதிக்கிறது. ஆனால், Outline சேவையகத்தின் மூலம் அனுப்பப்பட்ட உண்மையான தகவலைப் பார்க்க அவர்களை அனுமதிப்பதில்லை.
Outlineனின் தரவு மற்றும் தகவல் சேகரிப்பு குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.
பாதுகாப்பு மற்றும் தனியுரிமை குறித்த பொதுவான கேள்விகள்
ஆன்லைனில் என் அடையாளத்தை Outline நீக்க முடியுமா?
இல்லை, Outline என்பது அடையாளத்தை நீக்கும் கருவி அல்ல. நெட்வொர்க்கைக் கண்காணிக்க சாத்தியமுள்ளவர்களிடம் இருந்து உங்கள் தனியுரிமையை Outline பாதுகாக்கிறது.
நீங்கள் பார்வையிடும் இணையதளங்களில் உங்களை முழுமையாக அடையாளம் அறியப்படாதவராகக் காண்பிக்காது, ஏனெனில் நீங்கள் உள்நுழையும் சமயத்திலும் சில நேரங்களில் பிரவுசர் கைரேகை போன்ற நுட்பங்கள் மூலமாகவும் அவை உங்களை அடையாளம் காண முடியும். மொபைல் ஆப்ஸிற்கு, பெரும்பாலான நவீன ஸ்மார்ட் ஃபோன்களில் APIகள் உள்ளன, உங்கள் ப்ராக்ஸியைச் சாராமல் உட்பொதிக்கப்பட்ட GPS மூலம் தனிப்பட்ட முறையிலேயே உங்கள் இருப்பிடத் தகவலைக் கண்டறிய நிறுவப்பட்டுள்ள ஆப்ஸை அவை அனுமதிக்கின்றன.
VPNகள் பொதுவாக முக்கியமான பாதுகாப்புகளை வழங்குகின்றன, குறிப்பாக இணையக் கண்காணிப்பில் இருந்து, ஆனால் ஆன்லைனில் செயல்படுவதில் எப்போதும் ஆபத்துகள் உள்ளன. VPN பயன்படுத்தினாலும், உங்களை ஏற்கெனவே ISPக்கு அடையாளம் தெரிந்திருந்து உங்கள் நெட்வொர்க் டிராஃபிக்கை அதனால் கவனிக்க முடிந்தால், அது உங்கள் Outline சேவையகத்தின் IP முகவரியைக் கண்டறியக்கூடும். Outline சேவையகத்திற்கான அணுகலைத் தடைசெய்யவோ நீங்கள் பொதுவாக எப்போது ஆன்லைனில் இருக்கிறீர்கள், உங்கள் தோராயமான இருப்பிடம் என்ன என்பது போன்ற உங்கள் உபயோக வழக்கங்களைக் கற்றுக்கொள்ளவோ இந்தத் தகவல் பயன்படுத்தப்படலாம்.
நான் Outline பயன்படுத்துவதை யாராவது கண்டுபிடிக்க முடியுமா?
வாய்ப்புள்ளது. நீங்கள் அணுகும் பிளாட்ஃபார்ம்களும் சேவைகளும் கிளவுடு சேவையகத்தில் இருந்து உங்கள் இணைப்பு வருகிறது என்பதைத் தெரிந்துகொள்ளக்கூடும். எப்போதாவது, நீங்கள் VPN பயன்படுத்துகிறீர்கள் என்று அவர்கள் முடிவு செய்யலாம். ஆனால், உங்கள் இன்டர்நெட் டிராஃபிக்கின் உள்ளடக்கங்களை அவர்களால் பார்க்க முடியாது.
பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எல்லா இணைய அச்சுறுத்தல்களில் இருந்தும் Outline என்னைப் பாதுகாக்குமா?
இல்லை. பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எல்லா இணைய அச்சுறுத்தல்களில் இருந்தும் ஒரே கருவியால் உங்களைப் பாதுகாக்க முடியாது. Outline திறந்த இணைய அணுகலை உங்களுக்கு வழங்குவதுடன் உங்கள் டிராஃபிக்கை என்க்ரிப்ட் செய்வதன் மூலம் உங்கள் தனியுரிமையையும் அதிகரிக்கிறது. அதேசமயம் மால்வேர், ஃபிஷிங் போன்ற பிற வகையான தாக்குதல்களில் இருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ள கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி பரிந்துரைக்கிறோம்.
உங்கள் ஆன்லைன் பாதுகாப்பை வலுப்படுத்த, உங்கள் நிறுவனத்தின் இணையப் பாதுகாப்பு நிபுணருடன் இணைந்து பணியாற்றுங்கள். இல்லையென்றால், Security Plannerரில் முன்னணிப் பாதுகாப்பு நிபுணர்களிடமிருந்து பிரத்தியேக வழிகாட்டுதலைப் பெறலாம். இது உங்கள் சிக்கல்களுக்கு ஏற்ற இணையப் பாதுகாப்புக் கருவிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தெளிவான வழிமுறைகளை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட இணையதளமாகும்.
Jigsaw வழங்கும் Intra, Project Shield, கடவுச்சொல் எச்சரிக்கை போன்ற பிற இணையப் பாதுகாப்புத் தயாரிப்புகளையும் நீங்கள் பார்க்கலாம்.
VPN பயன்படுத்துவது சட்டப்பூர்வமானதா?
Outlineனை இயக்கும் முன் அல்லது ஆப்ஸைப் பயன்படுத்தும் முன், நீங்கள் பயன்படுத்துவதற்குத் திட்டமிட்டுள்ள கிளவுடு வழங்குநருக்கான உள்ளூர் சட்டங்கள், ஒழுங்குமுறைகள் மற்றும் சேவை விதிமுறைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.