அணுகல் குறியீடுகளுக்கு டேட்டா வரம்புகளை எப்படி அமைப்பது?
எல்லா அணுகல் குறியீடுகளுக்கும் பொருந்தும் டேட்டா வரம்பை நீங்கள் அமைக்கலாம். வரம்பை அமைக்க, Outline Managerரைத் திறந்து அமைப்புகளுக்குச் செல்லவும். டேட்டா வரம்புகளை ஆன்/ஆஃப் செய்வதற்காக அங்கே இருக்கும் பட்டனைப் பயன்படுத்தி வரம்பை அமைக்கலாம்.

வரம்பை அமைத்ததும், ஒவ்வொரு பயனரும் டேட்டா வரம்பை எந்த அளவிற்கு எட்டியுள்ளார் என்பதை அணுகல் குறியீடு பக்கத்தில் நீங்கள் பார்க்கலாம். அங்குள்ள பார் வரைபடம், கடந்த 30 நாட்களுக்கான டேட்டா பயன்பாட்டைக் காட்டும்.

உங்கள் அணுகல் குறியீடுகள் எல்லாவற்றிற்கும் வரம்பை அமைப்பதுடன், ஒவ்வொரு குறியீட்டிற்கும் அதற்கான தனிப்பட்ட டேட்டா வரம்பையும் நீங்கள் வழங்கலாம். இந்த அமைப்பு நீங்கள் இயல்பாக அமைத்துள்ள எந்தவொரு டேட்டா வரம்பையும் மீறிச் செயல்படும். ஒருவேளை இயல்பு டேட்டா வரம்பை நீங்கள் அமைக்கவில்லை என்றாலும் எந்தக் குறியீட்டுக்கும் டேட்டா வரம்பை அமைக்கலாம்.
குறியீட்டின் டேட்டா பரிமாற்ற வரம்பை அமைக்க, Outline Managerரைத் திறந்து, நீங்கள் அமைக்க விரும்பும் குறியீடு இருக்கும் இணைப்புகள் பிரிவிற்குச் சென்று, குறியீட்டு வரிசையின் வலது பக்கத்தில் உள்ள மெனுவைக் கிளிக் செய்யவும். அதில், டேட்டா வரம்பு என்பதைக் கிளிக் செய்யவும். "எனது அணுகல் குறியீடு" என்பதில் டேட்டா வரம்பை மாற்ற, டேட்டா வரம்புகளுக்கான ஐகானை கிளிக் செய்யவும்.

‘பிரத்தியேக டேட்டா வரம்பை அமை’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இந்தத் தேர்வுப்பெட்டியைத் தேர்ந்தெடுத்ததும், அந்தக் குறியீட்டுக்கான பிரத்தியேக டேட்டா வரம்பை நீங்கள் அமைக்கக்கூடிய ஒரு புலம் தோன்றும். இதைச் செய்து முடித்ததும், சேமி என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட குறியீட்டில் உங்கள் டேட்டா பரிமாற்ற வரம்பை நீங்கள் சேமித்தவுடன், ஒவ்வொரு குறியீட்டுக்கும் (கடந்த 30 நாட்களில்) டேட்டா உபயோகத்துடன், வரம்பு முதன்மைத் திரையில் காண்பிக்கப்படும்.
ஒரு அணுகல் குறியீட்டிலிருந்து டேட்டா வரம்பை அகற்ற, குறியீட்டின் டேட்டா வரம்பு தகவல் பெட்டிக்குச் சென்று, ‘பிரத்தியேக டேட்டா வரம்பை அமை’ என்ற பெட்டியைத் தேர்வுநீக்கி, ‘சேமி’ பட்டனைக் கிளிக் செய்யவும்.

டேட்டா வரம்பு குறித்த பொதுவான கேள்விகள்
30 நாட்கள் டிரெய்லிங் டேட்டா வரம்பு என்றால் என்ன?
30 நாட்கள் டிரெய்லிங் டேட்டா வரம்பு என்பது கடந்த 30 நாட்களில் ஒவ்வொரு குறியீட்டின் உபயோகத்தையும் கூட்டி, அந்தக் காலகட்டத்தில் குறியீட்டின் உபயோகத்தை வரம்பிற்குக் கீழே வைத்திருக்கும். இதனால் 30 நாட்கள் மட்டுமல்லாமல், அதற்குக் குறைவான நாட்கள் உள்ள கேலெண்டர் மாதங்கள் உட்பட, எந்த 30 நாட்களின் வரம்பையும் குறியீட்டினால் மீற முடியாது. இதனால், ஒவ்வொரு பயனருக்கும் கிடைக்கும் டேட்டா அவர்கள் 31 நாட்களுக்கு முன்பு பயன்படுத்திய அளவின்படி ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும்.
Outline ஏன் டிரெய்லிங் வரம்புகளைப் பயன்படுத்துகிறது?
டிரெய்லிங் வரம்புகள் ஒவ்வொரு 30 நாட்களுக்கும் உத்திரவாதங்களை வழங்குகின்றன. இவை தொடர்ச்சியான வரம்புகள் வழங்கும் உத்திரவாதங்களைப் போன்றவையே என்றாலும், உள்ளமைக்க எளிதானவை. உதாரணமாக, மாதத்தில் எந்த ஒரு நாளையும் விருப்பப்படி தேர்ந்தெடுக்கலாம். Outline டேட்டா உபயோகத்திற்கான தற்போதைய காட்சியுடனும் பகுப்பாய்வுச் சேவைகள், சேமிப்பகப் புள்ளிவிவரங்கள் போன்ற பொதுவான கருவிகளுடனும் அவை பொருந்துகின்றன.
டேட்டா வரம்பில் எந்தெந்த டேட்டா கணக்கிடப்படுகிறது?
சேவையகத்தில் இருந்து எக்ரெஸ் செய்யப்படும் ஒவ்வொரு அணுகல் குறியீடும் கணக்கில் சேர்க்கப்படும். அதாவது, சேவையகத்திற்கு வெளியே குறியீட்டின் சார்பாக அனுப்பப்படுகின்ற மற்றும் கிளையண்டிற்குத் திரும்ப அனுப்பப்படுகின்ற டேட்டா. நடைமுறையில், இது குறியீட்டிலிருந்து சேவையகத்திற்கு அனுப்பப்படும் மற்றும் திரும்ப வரும் டிராஃபிக்குடன் நெருக்கமாகச் சீரமைக்கப்பட வேண்டும், எனவே இது உங்கள் பயனர்களின் எண்ணிக்கையுடன் பொருந்தும் என நம்புகிறோம். எங்கள் கருத்துக்கணிப்பில் பங்கேற்ற கிளவுட் வழங்குநர்கள் எக்ரெஸ்ஸுக்கே பில் செய்வதால் நாங்கள் எக்ரெஸ்ஸைத் தேர்ந்தெடுத்தோம்.
டேட்டா வரம்பைப் பயனர்கள் மீறிவிட்டால் அவர்களுக்குத் தெரிவிக்கப்படுமா?
தற்சமயத்தில் இல்லை. பல கிளவுடு வழங்குநர்கள் முழு மாதத்திற்கும் 1 TB போன்ற வரம்பை வழங்குகின்றனர். இதனால் 10 பயனர்கள் 100 GB அல்லது 100 பயனர்கள் 10 GB என்ற அளவில் பயன்படுத்தலாம். இவை மிகவும் பெரிய எண்கள், பெரும்பாலான பயனர்கள் இந்த அளவுக்குப் பயன்படுத்துவார்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை. பயனர்கள் தங்கள் வரம்பை எட்டும்போது சேவையக நிர்வாகியை அணுகுவார்கள் என்று நம்புகிறோம். இருப்பினும், உபயோக விஷயத்தில் அறிவிப்புகள் உங்களுக்கு எந்தளவு உதவுகின்றன என்பது பற்றிய உங்கள் கருத்துகளை நாங்கள் வரவேற்கிறோம். நீங்கள் எங்களைஇங்கே தொடர்புகொள்ளலாம்.
டேட்டா வரம்பைப் பயனர்கள் எட்டப்போகிறார்கள் என்றால் அவர்களுக்குத் தெரிவிக்கப்படுமா?
வரம்பை நெருங்கும் ஒரு பயனருக்கு வரும் புதிய டேட்டாவின் அளவு நாளுக்கு நாள் மாறுபடும். ஏனெனில் இது 30 நாட்களுக்கு முன்பு அவர்கள் பயன்படுத்தியதை அடிப்படையாகக் கொண்டது. அறிவிப்புகள் இறுதிப் பயனர்களுக்கு உதவுவதற்குப் பதிலாக அவர்களைக் குழப்பிவிடும் என்றே நாங்கள் கருதுகிறோம். இது தொடர்பாக உங்கள் கருத்துகளை இங்கேவரவேற்கிறோம்.
பயனரின் டேட்டா பயன்பாட்டை என்னால் ரீசெட் செய்ய முடியுமா?
முடியாது. எப்போதுமே ஒரு பயனரின் வரம்பில் கடைசி 30 நாட்களுக்கான டேட்டா உபயோகம் குறித்த விவரங்கள் இருக்கும். இருப்பினும், அவர்களின் குறியீட்டுக்கான டேட்டா வரம்பை நீங்கள் உயர்த்தலாம் அல்லது அவர்களுக்காகப் புதிய குறியீட்டை உருவாக்கலாம்.
நான் டேட்டா வரம்புகளை ஆன் செய்தவுடன் எனது பயனர்களில் சிலர் ஏன் அணுகலை இழந்தார்கள்?
டேட்டா வரம்புகள் பயனர்களின் முந்தைய 30 நாட்களுக்கான டேட்டா பரிமாற்றத்தின் அடிப்படையிலானவை. டேட்டா வரம்புகள் ஆன் செய்யப்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும் இது பதிவு செய்யப்படும். எனவே, இந்தப் பயனர்களுக்கு வரம்பு செயல்படுத்தப்படும் முன்பே அவர்கள் வரம்பைத் தாண்டியிருக்கலாம். மேலும், ஒரே ஒரு குறியீட்டின் டேட்டா வரம்பை மாற்றும்போதுகூட, எல்லா டேட்டா வரம்புகளும் செயல்படுத்தப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ளவும்.
“30 நாட்களுக்கு 1 TB” போன்ற சேவையக அளவிலான வரம்பை நான் அமைக்கலாமா?
தற்சமயம் முடியாது. உங்கள் உபயோக முறை குறித்துஇங்கே மேலும் தெரிவியுங்கள்.
ஒரு குறிப்பிட்ட குறியீட்டில் இயல்பு டேட்டா வரம்பு, டேட்டா வரம்பு என இரண்டும் இருந்தால் எது செயல்படுத்தப்படும்?
குறிப்பிட்ட குறியீட்டுக்கான டேட்டா வரம்பு நீங்கள் அமைத்துள்ள இயல்பு டேட்டா வரம்பை (ஏதேனும் இருந்தால்) மீறிச் செயல்படுத்தப்படும்.
இயல்பு டேட்டா வரம்பை அமைக்காமல் ஒரு குறிப்பிட்ட குறியீட்டுக்கு டேட்டா வரம்பை அமைக்க முடியுமா?
முடியும். ஒரு குறியீட்டிற்கு டேட்டா வரம்பை அமைக்க இயல்பு வரம்பை வரையறுக்க வேண்டிய அவசியமில்லை. உதாரணத்திற்கு, ஒரு குறியீட்டின் மூலம் அதிகப்படியான டேட்டா பரிமாற்றம் செய்யப்படுவதில் இருந்து உங்களைப் பாதுகாக்க, பரந்த அளவில் பகிரப்படலாம் என்று நீங்கள் நினைக்கும் ஒரு குறியீட்டுக்கு வரம்பை அமைக்கலாம்.