அணுகல் குறியீட்டைப் பெறுவது எப்படி?
Outline என்பது நீங்கள் வாங்கி அணுகும் VPN சேவைகளைப் போன்றது அல்ல. உங்கள் தனிப்பட்ட VPN சேவையகத்தை உருவாக்கி அதற்கான அணுகலைப் பிறருக்குப் பகிர உதவும் ஒரு கருவியாகும். சேவை நிர்வாகியால் மட்டுமே அணுகல் குறியீட்டை வழங்க முடியும். அணுகல் குறியீடுகளை Outline குழு இலவசமாகவோ கட்டணத்திற்கோ வழங்காது. ஃபார்சியில் உள்ள Paskoocheh தவிர, அதிகாரப்பூர்வ Outline அணுகல் குறியீடு பார்ட்னர்கள் என்று எங்களுக்கு யாரும் இல்லை.
அணுகல் குறியீட்டைப் பெறுவதற்கான மூன்று விருப்பங்கள்:
- தங்கள் சேவையகத்திற்கு உங்களை அழைக்கும்படி பிறரிடம் கேட்டல்: Outline சேவையகம் வைத்திருக்கும் யாரையேனும் உங்களுக்குத் தெரிந்தால் அவரைத் தொடர்புகொண்டு அணுகல் குறியீட்டைக் கேட்கலாம்.
- உங்களுக்கென ஒரு சேவையகத்தை உருவாக்குதல்: Windows, Mac அல்லது Linux கம்ப்யூட்டரில் Outline Managerரைப் பதிவிறக்கி உங்களுக்கென்று சொந்தமாக ஒரு தனிப்பட்ட Outline சேவையகத்தை அமைக்கலாம். எல்லோருக்கும் ஏற்ப இந்தச் செயல்முறையை எளிதாக்கியுள்ளோம். குறிப்பாக, கிளவுடு சேவை வழங்குநரான DigitalOcean மூலம் இதை மிக எளிதாகச் செய்யலாம்.
- Outline அல்லது Shadowsocks சேவையைப் பயன்படுத்துதல்: Outline அல்லது Shadowsocks நெறிமுறையைப் பயன்படுத்தும் மூன்றாம் தரப்புச் சேவைகளுடனும் Outline கிளையண்ட்டைப் பயன்படுத்தலாம். உதாரணம்:
- Outline கிளையண்ட்டின் மாற்றியமைக்கப்பட்ட பதிப்பைப் பயன்படுத்தி இலவசச் சேவையை Outline மூலம் nthLink இயக்குகிறது.
- Outlineனின் மாற்றியமைக்கப்பட்ட பதிப்பான BeePass என்பதை ASL19 இயக்குகிறது. அத்துடன், BeePass சேவையகங்களுக்கு இலவச அணுகல் குறியீடுகளை வழங்கும் Telegram ரோபோவையும் அது இயக்குகிறது.
- ASL19 இன் Paskoocheh என்பதில் இருந்தும் Outline அணுகல் குறியீட்டை ஃபார்சி மொழிப் பயனர்கள் கேட்கலாம்.
Outline Client ஆப்ஸைப் பதிவிறக்கிய பிறகு உங்கள் அணுகல் குறியீட்டை Outline சேவையகத்துடன் இணைக்க, அதை நகலெடுத்து Outline Clientடில் ஒட்டவும்.