Skip to main content

Linuxஸில் Outline Clientடை நிறுவுதல்

Outline கிளையண்ட் பதிப்பு 1.15 முதல், Linux ஆப்ரேட்டிங் சிஸ்டங்களுக்கான பதிப்புகள் எல்லாம் இனி Debian தொகுப்புகளாக வெளியிடப்படும். நாங்கள் ஆதரிக்கும் ஆப்ரேட்டிங் சிஸ்டங்கள் தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு எங்கள் குறைந்தபட்ச சிஸ்டம் தேவைகளைப் பாருங்கள்.

Debian அடிப்படையிலான Linux டிஸ்ட்ரிபியூஷன்களுக்கான Outline கிளையண்ட்டை நிறுவுதல் (பரிந்துரைக்கப்படுகிறது)

இந்தக் கட்டளைகளை இயக்கவும்:

  1. Outlineனின் தரவு சேமிப்பகக் கீயை நிறுவி தரவு சேமிப்பகத்தைச் சேர்க்கவும்.

    wget -qO- https://us-apt.pkg.dev/doc/repo-signing-key.gpg | sudo gpg --dearmor -o /etc/apt/trusted.gpg.d/gcloud-artifact-registry-us.gpg
    echo "deb [arch=amd64] https://us-apt.pkg.dev/projects/jigsaw-outline-apps outline-client main" | sudo tee /etc/apt/sources.list.d/outline-client.list
  2. apt தொகுப்புப் பட்டியலைப் புதுப்பித்து Outline கிளையண்ட்டின் சமீபத்திய பதிப்பை நிறுவவும்.

sudo apt update
sudo apt install outline-client

இனிவரும் புதுப்பிப்புகளைப் பார்க்கவோ நிறுவவோ படி 2ல் உள்ள கட்டளைகளை மீண்டும் இயக்கவும். 1.15 பதிப்பு முதல், Linuxஸில் Outline கிளையண்ட்டிற்கு ஆப்ஸ் தானியங்குப் புதுப்பிப்பு முடக்கப்பட்டிருக்கும் என்பதை நினைவில்கொள்ளவும்.

Outline கிளையண்ட்டை நிறுவல் நீக்க, இந்தக் கட்டளையை இயக்கவும்:

sudo apt purge outline-client

மாற்று வழி

  1. https://s3.amazonaws.com/outline-releases/client/linux/stable/outline-client_amd64.deb தளத்தில் இருந்து சமீபத்திய Outline கிளையண்ட் Debian தொகுப்பைப் பதிவிறக்கவும்
  2. தொகுப்பை நிறுவ, கட்டளை வரியில் இந்தக் கட்டளைகளை இயக்கவும்
wget -O ./outline-client.deb https://s3.amazonaws.com/outline-      releases/client/linux/stable/outline-client_amd64.deb
sudo apt install ./outline-client.deb
  1. 1.15 பதிப்பு முதல், Linuxஸில் Outline கிளையண்ட்டிற்கு ஆப்ஸ் தானியங்குப் புதுப்பிப்பு முடக்கப்பட்டிருக்கும் என்பதால் நீங்களாகவே புதுப்பிப்பு இருக்கிறதா என்று பார்க்கவும்.

  2. Outline கிளையண்ட்டை நிறுவல் நீக்க, கட்டளை வரியில் இந்தக் கட்டளையை இயக்கவும்:

sudo apt purge outline-client